![வாடிவாசல் திரைப்படம் ஆரம்பம்?](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
வெற்றிமாறனின் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்பட வேலைகள் ஆரம்பித்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத்தின் தயாரிப்பாளர் அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது என சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் கலைப்புலி எஸ்.தாணு புகைப்படத்தை வெளியிட்டு இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
பட்டிப்பொங்கல் தினமான இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், வெற்றிமாறன் சூர்யா ஆகியோர் முதற் தடவையாக இணையும் திரைப்படம் இது.