ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, அவர்களோடு ஒன்றிணைந்தை செயற்படும் வகையில் தங்களது அரசாங்கத்தின்நடவடிக்கைகள் அமையும் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் உள்ளவர்களும், தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களும் இந்த அரசாங்கத்தில் தலைமை பொறுப்பினையும், முக்கிய பொறுப்புகளையும் பெற்றுள்ளனர். தலிபான் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான முல்லா மொஹமட் ஹஸன் அஹுன்ட் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் கறுப்பு பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு எதிரான போரில் முக்கிய இடம்பிடித்த பலர் இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். பெண்களுக்கு எந்த உயர் பதவிகளும் வழங்கப்படவில்லை.

அமெரிக்காவிற்கு எதிரான போரில் தலைமை தாங்கியவரும், தலிபான்களின் இராணுவத்துக்கு தலைமை தாங்கியவரும், ஹக்கானி இராணுவ குழுவின் தலைவருமான சிராஜ்ஜுதீன் ஹக்கானி உள்நாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர். தலிபான் அமைப்பின் நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராகவும் உப பிரதமர்களாக முல்லா அப்துல் ஹானி பரதர், அப்துல் சலாம் ஹனாபி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியுறவு அமைச்சராக அமீர்கான் முட்டாகி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர், இரு உபபிரதமர்கள், ஆறு அமைச்சர்களோடு அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால அமைச்சரவை எனவும், பின்னர் முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் என ஏற்கனவே தலிபான்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version