முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யக்கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரசிங்கவிற்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யுமாறு கோரி, அவரது தரப்பிலிருந்து ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அபேரத்ன மற்றும் டி.எம் சமரகோன் ஆகிய நீதிபதிகள் மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை ஜனவரி 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version