நாடளாவிய ரீதியில் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இணையம் ஊடாக இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் தொழில்நுட்ப பிரிவினர் இந்நிலையை வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.