பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானம்

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று (05.02) இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

தற்போதுள்ள பணி வெற்றிடங்களுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்

பொது சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவும் உள்ளது. இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு மற்றொரு குழு
நியமிக்கப்படும்.

தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்” என்றார்.

Social Share

Leave a Reply