பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார கொள்ளப்பட்ட வேளையில் அந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அட்னான் மாலிக்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
விருது பெற்ற அட்னான் மாலிக் நடைபெற்ற சம்பவம் தொடரில் விளக்கமளித்துள்ளார். அன்று தொழிற்சாலையில் ஒட்டியிருந்த சுவரொட்டியை பிரியந்த கிழித்து குப்பை தொட்டியில் போட்டர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தது என அவருக்கு தெரியாது. உறுது மொழியில் எழுதப்பட்டதை அவரால் வாசிக்கமுடியாது என அட்னான் மாலிக் தெரிவித்துள்ளார்.
“தொழிற்சாலையில் ஏதாவது ஒட்டியிருந்தால் அவருக்கு பிடிக்காது. விரும்பமாட்டார். அதனால்தான் அவற்றை அகற்றினார். அதனை பார்த்த சில ஊழியர்கள் குழப்பமடைந்தனர். கூட்டம் கூடி பேச ஆரம்பித்தனர். வெளியிலிருந்தும் நபர்கள் ஒன்று சேர ஆரம்பித்தனர்.
அதனை அவதானித்த நான் உடனடியாக சென்று அவர்களை தடுக்க முயன்றேன். அவர் பிழை செய்திருந்தால் தொழிற்சாலை நிர்வாகம் அவரை தண்டிக்கும். யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாமென கூறினேன். நிலைமை மோசமாக காணப்பட்டதனால் பிரியந்தவை கூரையில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினேன்.
என்னை தாக்கி காயப்படுத்த என்னால் முடியாமல் போனது. அந்த கும்பல் பிரியந்த இருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்கியது. நான் காயப்பட்டதனால் மிகுதி விடயங்களை சொல்ல முடியவில்லை” என அட்னான் மாலிக் கூறியுள்ளார்.
பிரியந்த குமார சிறந்த மனிதர். எமது தொழிற்சாலையின் பொது முகாமையாளர். எங்கள் பலருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தவர். இன்று அவரை இழந்துவிட்ட்டோம். அவர் இல்லையென்பதை உணர முடியவில்லை. இந்த சமப்வம் மிகப்பெரிய அதிர்ச்சி என தெரிவித்த அட்னான் மாலிக்,
மீண்டும் தொழிற்சாலைக்கு சென்றேன். தொழிற்சாலை அமைதியாகவுள்ளது. அனைவரும் அமைதியாக உள்ளனர். பிரியந்தவின் இழப்பால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாராலும் வேலை செய்ய முடியவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரால் வழங்கப்பட்ட விருதினை பிரியந்தவின் பிள்ளைகளுக்கு சமர்ப்பிப்பதாகவும், இந்த சமபவத்தினால் இலங்கை பாகிஸ்தான் உறவு பாதிக்க இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
