இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் 07 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. மூன்றாம் நாளான இன்றைய நாளில் துடுப்பாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. அஞ்சலோ மதியூஸின் துடுப்பாட்டம் மூலமாக ஓரளவு தடுமாற்றத்தில் இருந்து தப்பி ஓரளவான ஓட்டங்களை பெற்றுள்ளது. குஷல் மென்டிஷும் ஓரளவு கைகொடுத்துள்ளார். இலங்கை அணி 62.1 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அஞ்சலோ மத்தியூஸ் 76 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். குஷல் மென்டிஸ் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றார். தனது இறுதிப் போட்டியில் விளையாடிய திமுத் கருணாரட்ன 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணி 54 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளனர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மத்தியூ குன்மான் 4 விக்கெட்களையும், நேதன் லயோன் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மதியபோசன இடைவேளையின் போது அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 106.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலியா அணி சார்பாக உஸ்மான் காவாஜா 36 ஓட்டங்களுக்கும், ட்ரவிஸ் ஹெட் 21 ஓட்டங்களுடனும், மார்னஸ் லபுஸ்ஷென் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்ட்டன. 4 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் 259 ஓட்டங்களை பகிர்ந்தனர். இன்றைய நாள் ஆரம்பித்ததும் விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. அலெக்ஸ் கேரி 156 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 3 வருடங்களிற்கு பிறகு அவரது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது அவரின் 2 ஆவது சதமாகும். அலெக்ஸ் கேரி அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் காப்பாளராகஆசியாவில் 2 ஆவதாக சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது அவரின் 36 ஆவது சதமாகும்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 05 விக்கெட்களை கைப்பற்றினார். இவற்றில் நான்கு விக்கெட்கள் இன்று கைப்பற்றப்பட்டவை. நிஷான் பீரிஸ் 3 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ் 2 விக்கெட்களையும் கைபப்ற்றினார்கள். பிரபாத் ஜெயசூரிய 11 ஆவது தடவையாக ஐந்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 97.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும்
இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்கமால் 85 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பத்தும் நிஸ்ஸங்க 11 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 1 ஓட்டத்தையும், கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். தனஞ்சய டி சில்வா முதற் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், நேதன் லயோன், மத்தியூ குனேமன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ஸ்டீவ் ஸ்மித் 120 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 139 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
உஸ்மான் காவாஜா 36 ஓட்டங்களுக்கும், ட்ரவிஸ் ஹெட் 21 ஓட்டங்களுடனும், மார்னஸ் லபுஸ்ஷென் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்ட்டன. 4 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் 239 ஓட்டங்களை தற்போது இணைப்பாட்டமாக பகிர்ந்துள்ளனர். இது ஸ்டீவ் ஸ்மித்தின் 36 ஆவது சதமாகும். அலெக்ஸ் கேரி 3 வருடங்களிற்கு பிறகு அவரது சதத்தை பூர்த்தி செய்கிறார். இது அவரின் 2 ஆவது சதமாகும். அலெக்ஸ் கேரி அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் காப்பாளராகஆசியாவில் 2 ஆவதாக சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இவருக்கு முதல் அடம் கில்க்ரிஸ்ட் சதங்களை பூர்த்தி செய்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 2 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூரிய 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.