![கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி நாட்டிற்கு](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையுமென
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவிதுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“முதலாம் கட்டத்தில் 1000 வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் ஏற்கனவே
திறக்கப்பட்டுள்ளன.
மார்ச் இரண்டாம் வாரமளவில் இரண்டாவது வாகன தொகுதி நாட்டை வந்தடையும். அதன் பின்னர் அனைத்து வகையான புதிய வாகனங்களும் நாட்டில்
கிடைக்கும்” என அவர் மேலும் கூறினார்.