
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (09.02) இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.