2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10/12) பாராளுமன்றில்இடம்பெறவுள்ளது.
கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மறுநாள் தொடக்கம் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இவ்வேளையில், இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று இடம்பெறவுள்ள குழுநிலை விவாதம் நிறைவுபெற்றதும் மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.