புதுடெல்லியில் இன்று (10/12) நடைபெறும் இந்திய தலைமை முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகளில் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இறுதி ஊர்வலம் டல்லியிலுள்ள கே.காமராஜ் சாலையில் தொடங்கி டெல்லி ப்ரார் சதுக்கம் மயானம் வரை செல்லும் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த புதன்கிழமை (08/12) ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஜெனரல் ராவத்தின் உடல் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இருந்து சென்னை ரெஜிமென்ட் சென்டருக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் ஹெலிகொப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது .
விபத்தில் உயிர்தப்பிய கேப்டன் வருண் சிங் மட்டுமே வெலிங்டனில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
