மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம்

மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலான சுழற்சி முறையிலான, ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடை நேரங்களில்
மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த நேர மாற்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேவையேற்படின் மின்சார விநியோகத்தடை அமல்படுத்தப்படும் நேரம் 30 நிமிடங்களால்
மாறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, RSTW ஆகிய வலயங்களில் பிற்பகல் 3.30 முதல் 4 மணிக்குள் மின் விநியோகத் தடை
அமுலாக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

ABCDPQ ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு
மாலை 6.30 முதல் 7 மணி வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

EFGHUV ஆகிய வலயங்களில் மாலை 6.30 முதல் 7 மணி வரை மின் விநியோகத் தடை
அமுல்படுத்தப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

IJKL ஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 9.30 முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்
என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாளையதினம் மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply