சரித் அசலங்க அதிரடி. போராடக்கூடிய நிலையை அடைந்த இலங்கை

சரித் அசலங்க அதிரடி. போராடக்கூடிய நிலையை அடைந்த இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. இதில் சரித் அசலங்க 127(126) ஓட்டங்களையும், டுனித் வெல்லாலகே 30(34) ஓட்டங்களையும், குஷல்
மென்டிஸ் 19(17) ஓட்டங்களையும், ஜனித் லியனகே 11(29) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 4(5) ஓட்டங்களையும் பெற்றனர். இது சரித் அசலங்கவின் 4 ஆவது சதமாகும்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் சீன் அப்பொட் 3 விக்கெட்களையும், ஆரோன் ஹார்டி, ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அணி விபரம்

இலங்கை அணி :- பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், கமிண்டு மென்டிஸ், சரித் அசலங்க (தலைவர்), ஜனித் லியனகே, டுனித் வெல்லாலகே, வனிது ஹசரங்க, மஹீஸ் தீக்ஷண, எஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ

அவுஸ்திரேலியா அணி :- மட் ஷோர்ட், ஜேக் பிரேசர் மக்கர்க், கூப்பர் கொன்னொலி, ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்) , மார்னஸ் லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, ஆரொன் ஹார்டி, சீன் அப்பொட், நேதன் எலிஸ்,ஆடம் சம்பா, ஸ்பென்ஸர் ஜான்ஸன்

இலங்கை, அவுத்திரேலியா நாணய சுழற்சி விபரம்.
https://vmedianews.com/archives/62482

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version