வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி

வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி

மன்னார் பிரதேச சபை, நகரசபை, பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ்
நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வங்காலை பறவைகள் சரணாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால் இன்று புதன் கிழமை இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதையும், எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான
இயற்கை வாழ்விடங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்
நோக்கமாகக் கொண்டு இந்த பணிகள் முனனெடுக்கப்பட்டன.

வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தள்ளாடி பாதுகாப்புப் படையினர்
மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து துப்பரவுப் பணியினை கொண்டிருந்தனர்.

இதன் போது பறவைகள் சரணாலயத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்திக் போத்தல்கள், பொலித்தின் பைகள்
மற்றும் பல கழிவுப் பொருட்கள் கிரமமான முறையில் சேகரிக்கப்பட்டு அந்த இடங்களிலிருந்து உரிய முறையில் அகற்றப்பட்டன.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version