
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று(18.02) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைதந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நாளை புதன்கிழமை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கடந்த 06 ஆம் திகதி மறைத்து வைக்கப்பட்டிருந்த இருவேறு பகுதிகளில் பிரித்து வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் பாகங்களை மீட்டனர்.