தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும்
என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

இதற்கமைய, ஆணைக்குழு அதிகாரிகளும் இன்று கூட உள்ளனர்.

Social Share

Leave a Reply