வரவுசெலவுத்திட்டத்தை கவனமாக ஆராய்ந்துபார்க்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை

நீதி, சமத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றிற்காக இந்த முழு நாட்டையும் திசைவழிப்படுத்தும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் முதலாவது வாக்கெடுப்பு தினத்தன்றே பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது, தற்போதைய அரசாங்கம் எத்தகைய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க எதிர்பார்க்கிறது இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களுக்கு அப்பால் சென்று இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சிந்தனைகளை கவனமாக ஆராய்ந்துபார்க்குமாறு குறிப்பாக நம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டிற்கு ஒரு புதிய திசையை, ஒரு புதிய சிந்தனையை மற்றும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படையாகக் கொண்டுள்ள பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலான வரவுசெலவுத்திட்டம் என்பதை நான் தெளிவாக சுட்டிக்காட்டுகிறேன்.

எங்கள் அடுத்த கட்ட செயற்பாடுகள், நமது பயணத்தின் அடித்தளம், நாம் உருவாக்க நினைக்கும் சமுதாயம், நாம் கட்டியெழுப்ப விரும்பும் நாடு, அந்த நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் என்ன என்பது இந்த வரவு செலவுத்திட்டத்தில் மிகத் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நவதாராளவாத வரவு செலவுத் திட்டம் என்றும் ரணிலின் கொள்கைகளின் நீட்சி என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில சமயங்களில் அவர்களும் இதைத்தான் செய்ய இருந்தார்கள் என்றும் கூறுகிறார்கள், அவர்களின் முன்மொழிவுகள்தான் இவை என்றும் சொல்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி இடதுசாரி கட்சி என்பதால் இது கட்சியின் கொள்கைக்கு முரணானது என்றும் கூறுகிறார்கள்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில், சமூகத்தை வலுப்படுத்துதல், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சி, தலையீடு என்பனவாகும்.

இது வெறுமனே மேலோட்டமான ஜனநாயகம் மட்டுமல்ல. உண்மையான அர்த்தமுள்ள பங்கேற்பு ஜனநாயகமாகும். சந்தையை ஒழுங்குபடுத்துவதை எடுத்துக் கொண்டால், சந்தையை ஒழுங்குபடுத்துவது மட்டும் அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல. எங்கள் சிந்தனையில், தனியார் மற்றும் அரச துறை ஆகிய இரண்டினதும் தலையீட்டின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்படும் சந்தை.

சந்தையை ஒழுங்குபடுத்துவது மட்டுமே அரசாங்கத்தின் பணி என்று நாம் பார்க்கவில்லை, அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு உள்ளது. இவையனைத்தும் தான் எமது வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கும் சிந்தனைகள்.

சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்னொரு பொய்க் கதையை சொல்கிறார்.
அதிபர்களின் சம்பளம் 30,105/= அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவரின் சம்பளம் 25,360/= ஆக அதிகரித்துள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் 15,750/= ஆக அதிகரித்துள்ளது.

Social Share

Leave a Reply