ஹட்டன் – செனன் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு தொடரில் இன்றிரவு (03.03) தீ பரவியது.
டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.