2022 ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.