2 இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்ல தடை

இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் அமெரிகா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த இரண்டு இராணுவ அதிகாரிகளும், அவர்களது குடும்பங்களும் அமெரிக்காவுக்குள் உள் நுழைவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

நேற்று (10.12) மனித உரிமை தினம் அனுஷ்டிக்கப்பட்டு நிலையில் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் “திருகோணமலை 11” என அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவரான கடற்படை உளவு பிரிவினை சேர்ந்த சந்தன ஹெட்டியாராச்சி, 2000 ஆம் ஆண்டு 8 கிராம வாசிகளை நீதிக்கு புறம்பாக கொலை செய்த முன்நாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரட்நாயக்க ஆகிய இருவரமே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் இவ்வாறு அமெரிக்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திரா சில்வாவுக்கு அமெரிக்கா இதே போன்ற தடையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்ல தடை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version