போரா சமூக தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப்புக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கும் இடையில் நேற்று (11/12) ஜனாதிபதியின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, தான் மிகவும் நேசிக்கின்ற இலங்கைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, எதிர்காலத்திலும் தமது சீடர்களுடன் இந்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்திருப்பதாகவும் செய்ஃபுத்தீன் சஹெப் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தொற்றொழிப்புக்கான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த சஹெப், இலங்கையின் வளர்ச்சியைத் தான் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 – செய்கடமை அறக்கட்டளைக்கு, போரா சமூகத்தின் தலைவர் செய்ஃபுத்தீன் சஹெப் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு போரா சமூகத்தினர் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

போரா சமூக தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version