தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11/12) நியமித்துள்ளார்.
அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராகவும், ஏனைய உறுப்பினர்களாக ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தனவும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
