மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 05 கட்சிகள் தமது வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை, 05 கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதன் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர
சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக
கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் நகர சபை,நானாட்டான்,முசலி,மாந்தை
மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார தலைமையில் மன்னார் நகர சபை,
நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்
தலைமையில் மன்னார் நகர சபைக்கான வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அபுக்கலாம் ஆசாத் முஜிப் ரஹ்மான் தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு மன்னார் நகர சபைக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 05 கட்சிகள் தமது வேட்பு மனு தாக்கல்

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாள

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version