முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 1600 பேர் கைது

சட்டரீதியாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவிற்கமைய, சட்டப்பூர்வமாக பதவி விலகாமல் பணியில் இருந்து தப்பிச்
சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகின.

இதன்படி, நேற்று (19.03) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவ வீரர்கள் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும் 72 கடற்படை வீரர்களும் அடங்குகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version