2025 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார்.
அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளில் அமெரிக்காவின் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக வங்கியின் தலைமையகத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாடு டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வது மற்றும் அதன் பங்கினை ஆராயும் நோக்கில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல்மயப்படுத்தல் செயற்பாடுகளுக்கென இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையின் நிரந்தர டிஜிட்டல் பரிணாமத்தை முன்னிட்டு வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உபாய மார்க்கங்கள் தொடர்பில் பூகோள நிபுணர்களுடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துரையாடினார்.