LPL போட்டி முடிவுகள்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் கண்டி மற்றும் தம்புள்ளை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கண்டி அணி முதல் வெற்றியினை பதிவு செய்துள்ள அதேவேளை தம்புள்ள அணி முதலிடத்தை பெற்றுள்ளது.


கோல் கிளாடியேட்டர்ஸ், கண்டி வொரியேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 44 ஓட்டங்களையும், சமிட் பட்டேல் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்களையும், ஷிராஸ் அஹமட், நிமேஷ் விமுக்தி 2 ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினாரக்ள்.


பதிலுக்கு துடிப்பாடிய கண்டி வொரியேர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்ற ரவி போப்பரா போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். ரொம் மூர்ஸ் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சமித் பட்டேல் பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது. இதில் நிரோஷன் டிக்வெல்ல 30 ஓட்டங்களையும், சொஹைப் மக்ஸூட் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவி ராம்போல், ஜெப்ரி வன்டேர்சை ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று 1 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமால் ஆட்டமிழ்க்காமல் 65 ஓட்டங்களையும், தனஞ்செய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் தரிந்து ரத்னாயக்க 3 விக்கெட்களையும், இம்ரான் தாகீர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். போட்டியின் நாயகனாக தரிந்து ரத்னாயக்க தெரிவு செய்யபப்ட்டார்.
புள்ளி பட்டியல்

இடம்அணிபோட்டிவெற்றிதோல்விசமநிலைபுள்ளிஒ.நி.ச.வே
01தம்புள்ள ஜியன்ட்ஸ்  53207-0.336
02 ஜப்னா கிங்ஸ்  431061.778
03கோல் கிளாடியேட்டர்ஸ்522150.406
04கண்டி வொரியேர்ஸ்41312-0.387
05கொழும்பு ஸ்டார்ஸ்  41302-1.192
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version