பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்குரிய விசேட அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

அதற்கமைய அடுத்த பாரளுமன்ற அமர்வு எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இறுதியாக கூடிய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி பாராளுமன்ற அமர்வை மீளக்கூட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி நேற்று (12/12) நள்ளிரவு வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த அமர்வினை எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version