இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் முடிவு இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வரி விதிப்பு அசாதாரண தீர்மானம் எனினும் அது அமெரிக்காவின் உரிமை என்பதை தாம் அறிவதாகவும், இதன் விளைவாக இலங்கை பாதகமாக திசைக்கு திரும்ப கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்,
மேலும் இதை காரணம் காட்டி நாங்கள் பின்னோக்கி நகர முடியாது எனவும், பொருளாதாரத்தில் பலம் பெற ஆரம்பித்த சிறிது காலத்திலேயே இவாறான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.