நாட்டின் சிறந்த கலாச்சார விழாவாகக் கருதப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைவருக்கும் அதிஷ்டமான புத்தாண்டாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை வாழ் மக்கள் சித்திரை மாதத்தை செழிப்பான மாதம் என அழைக்கிறார்கள். இந்த மாதத்தை மாதத்தை அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்டு இலங்கை மக்கள் வரலாறு முழுவதும் புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர்.
புத்தாண்டு என்பது ஒற்றுமைஇ நட்பு ஒற்றுமைஇ நட்பு ஆதரவு மற்றும் பரஸ்பர நல்லெண்ணம் வளர்ந்து மனித இதயங்களில் பிரதிபலிக்கும் ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனித நாகரிகமானது பண்பாடுகளை முழுமையாக்குவதன் மூலம் உருவானதுடன் அவர்களின் தனித்துவமான கலாச்சார விழாக்கள் அவர்களை மிகவும் சிறந்த பாதைக்கு இட்டுச் செல்கின்றன. உறுதிப்பாடு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் மூலம் முன்னால் உள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாம் எதிர்பார்க்கும் உண்மையான மறுமலர்ச்சியை உருவாக்க முடியும் என்று நாம் இந்நாளில் நம்புவோம்.
உங்கள் அனைவருக்கும் செழிப்பு அமைதி நல்லிணக்கம் மற்றும் உண்மையான மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்!
ஹனீஃப் யூசுப்
மேல் மாகாண ஆளுநர்