தௌபீக் எம்.பியை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை

2022ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாசிப்பில் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எம்.எஸ். தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version