கங்காரூ கிங் கிரிக்கெட் கழக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கொழும்பில் இயங்கி வரும் கங்காரு கிங் கிரிக்கெட் கழகத்தின் வீரர்களுக்கான உறுப்புரிமை சான்றிதழ் நேற்று(20.04) வழங்கி வைக்கப்பட்டது. கங்காரூ கிங் கிரிக்கெட் கழகத்தில் விளையாடி வரும் வீரர்களுக்கு கொழும்பு NCC மைதானத்தில் இயங்கி வரும் காமினி திஸாநாயக்க உள்ளக அரங்கில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கழகம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 15 வருட காலமாக இயங்கி வரும் கங்காரு கிரிக்கெட் அக்கடமியில் பயிற்சிகளை பெற்று சிறப்பாக வளர்ந்து கழக மட்டப்போட்டிகளில் விளையாடக்கூடிய திறமையுடைய வீரர்கள் இந்த கழகத்தில் விளையாடி வருகின்றனர். கங்காரு கிரிக்கெட் அக்கடமியின் முகாமைத்துவைப் பணிப்பாளர் கோசலாதேவி, கங்காரு கிரிக்கெட் கழகத்தின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கழக வீரர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததார். இந்த கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளராக கார்த்திக்செல்வன் கடமையாற்றுகிறார்.

கங்காரு கிரிக்கட் அக்கடமி கிரிக்கெட்டை விளையாட ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு சரியான அடிப்படையை வழங்கும் ஒரு கிரிக்கெட் அக்கடமியாக செயற்பட்டு வருகிறது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுள் முன்னணியில் திகழும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் செல்வன் இந்த அக்கடமியின் பயிற்சிகளை வழங்கி வருகிறார். இவரது சிறந்த நுட்பமான பயிற்றுவிப்பு மாணவர்களுக்கு நல்ல அடிப்படையினை வழங்கும் அதேவேளை, திறமையானவர்களை இனம் கண்டு அவர்களை உரிய பாதையில் வழிகாட்டி பாடசாலை அணிகளில் திறமையை காட்டக்கூடிய வகையில் இந்த அக்கடமி மற்றும் பயிற்றுவிப்பளர்கள் வீரர்களை வளர்த்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அக்கடமி, கழகம் ஆகிய இரண்டும் இணைத்து கிரிக்கெட் வீரர்களை சிறந்த முறையில் வளர்க்கும் முகமாக செயற்பட்டு வருகின்றது.

கங்காரூ கிங் கிரிக்கெட் கழக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version