விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை பார்வையிடவே அவர் அங்கு செல்வதாக பிரதமரின் இணைப்பு செயலாளரும், வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற இணைப்பு அதிகாரியுமான கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விஜயம் தனியாக அபிவிருத்தி மேற்பார்வைக்கான விஜயம் மட்டுமே. மக்கள் சந்திப்புக்களோ, நிகழ்வுகளோ இடம்பெறாது எனவும் கடுமையான கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாவே அமைச்சரின் யாழ் விஜயம் இடம்பெறுமெனவும் கீத்நாத் தெரிவித்துள்ளார்.
