சேவைகளிலிருந்து விலக தீர்மானம்

மருதானை புகையிரத தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய இன்று (13/12) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நாளைய தினம் (14/12) புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சேவையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சேவைகளிலிருந்து விலக தீர்மானம்

Social Share

Leave a Reply