உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும்

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை https:/www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதனூடாக  பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்றன.

பரீட்சையில் 333,158 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply