முக்கிய பிரமுகர்களுடன் விருந்துபசாரம்

நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பும் இரவு நேர விருந்துபசார நிகழ்வும் நேற்று (12/12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிராந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நத்தார் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு நிகழ்வில் அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் தற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திர சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

முக்கிய பிரமுகர்களுடன் விருந்துபசாரம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version