இந்த ஆண்டு இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு பரவலில் விரைவான அதிகரிப்பு காணப்படவில்லை என்றாலும், இடைவிடாத மழையுடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களின் அதிகரிப்பு காரணமாக பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் பொது மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.