நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பலப்பிட்டி நீதவான் நீதிமன்ற அதிகாரியான குறித்த சந்தேக நபர், வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க ரூ. 5,000 கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.