இலங்கையின் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் நிறுவனங்களில் ஒன்றான கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், இனிவரும் கிரிக்கெட் பருவங்களுக்கான அதிகாரப்பூர்வ அனுசரணையாளராக லங்கா ஐஓசி பிஎல்சியுடன் கைகோர்த்துள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. இது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தீர்மானமாகவும் கருதப்படுகிறது.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப் தேசிய அளவிலான திறமைகளை வளர்ப்பதில் முன்னணியில் உள்ளது. தற்கால வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், துணித் வெள்ளாலகே, தில்ஷான் மதுஷங்க, அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய லக்ஷன் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமையையும் கொண்டுள்ளது. மேலும் சமிந்த வாஸ், ரொமேஷ் களுவிதாரண மற்றும் ராய் டயஸ் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெறுவர்.
லங்கா ஐஓசியின் முதன்மை வர்த்தக நாமமான சர்வோ லூப்ரிகண்ட்ஸால் இயக்கப்படும் இந்த புதிய கூட்டாண்மை, அதிகரித்த வளங்கள் மற்றும் தேசிய அளவிலான வீரர்களை ஆதரிக்கும் மற்றும் உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
கடந்த 19 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் நம்பகமான மசகு எண்ணெய் வர்த்தக நாமமாக சர்வோ இருந்து வருகிறது,
மேலும் இந்த கூட்டமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
