அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09.06) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
அரசு கால்நடை மருத்துவர்களுக்கான சேவை அரசியலமைப்பை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதை அமல்படுத்த காலம் தாமதிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 6 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து அரசு கால்நடை அலுவலகங்களின் பணிகளும் பாதிக்கப்படும் என்று அதன் தலைவர் டாக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.