பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் கடந்த (06.06) அன்று இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீட்டை நிருமாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் நவேஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் நிமல் ராஜசிங்க,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் குறித்த கிராம சேவகர் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பயனாளியின் கணவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீடமைப்பானது 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply