யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் கடந்த (08.06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதோடு புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கெளரவ குமார ஜெயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கெளரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply