பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவைக்கான நிர்வாக சபைக் கூட்டம் இன்று(12.06) காலை 10. 00மணிக்கு நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலாசார விழாவுக்கான முன்னேற்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எட்டப்பட்டன. இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசாரப் பேரவை உறுப்பினர்கள், கலைமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதாக கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply