இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அங்குள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இஸ்ரேலுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் தங்கள் விமானங்களை தாமதப்படுத்துவது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் உட்பட பிராந்தியம் முழுவதும் வான்வெளி வழி விமான பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அருகில் வைத்திருப்பது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version