நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல்தொட்டுபொல கடற்கரை பகுதியில் இன்று (14.06) காலை முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 56 வயதான பொலிஸ் சார்ஜன்ட் என்பதுடன், இவர் நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த ஜெயந்த புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
நீதவானின் விசாரணைக்குப் பிறகு, சடலம் தற்போது நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.