காட்டு யானை தாக்கி காவற்துறை அதிகாரி பலி!

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானையால் காயமடைந்து வீதியில் விழுந்த குறித்த நபர், அப்பகுதியில் பயணித்த பேருந்து ஒன்றின் மூலம் தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீரலந்த, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 53 வயதுடை, தெஹியத்தகண்டிய காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்திற்கு கடமைக்காகச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply