விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வு இன்று (17.06) இடம்பெறவுள்ளது.
இன்று (17.06) முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை இது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றம் ஒன்று கூட உள்ளது,
மேலும் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு முன்பணம் வழங்குவது குறித்த சிறப்பு தணிக்கை அறிக்கை மீதான விவாதமும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவும் கலந்துகொள்ளவுள்ளார்.