நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக மன்னார் மாவட்ட பள்ளிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமின் நில அளவினை அளப்பதற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான கோரிக்கை ஒன்றினை அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இன்று (17.06) காலை 10,30 மணி அளவில் அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களிடம் சமர்ப்பித்தனர்.
குறித்த கோரிக்கையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அவர்கள் பொதுமக்களுக்கு குறித்த கடற்படை முகாமின் காணியினை கையளிக்குமாறு வேண்டி கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்கள் எனவும் அக்கடிதத்திற்கு பதில் வரும்வரை மேற்குறிப்பிட்ட காணியினை அளக்கும் செயற்பாட்டினை நிறுத்தும் படியும் வேண்டியிருந்தனர்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.