இன்று (18.06) காலை இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதி – மீன்னான பகுதியில் பேருந்துடன் கொள்கலன் பாரவூர்தி ஒன்றும் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்,