வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத சாதனங்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பாகங்கள் அகற்றும் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பாளர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொட இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சாதனங்களில் பிரகாசமான விளக்குகள், ஒலிபெருக்கிகள் மற்றும் உலோக கம்பங்கள் ஆகியவை அடங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளில் பலவற்றில், இதுபோன்ற சாதனங்கள் விவத்துக்குள்ளானவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவொரு ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டாலும், வாகனங்களில் செய்யப்படும் இந்த அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் அகற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.