ஈரானில் பாரிய நிலநடுக்கம்!

ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேரப்படி நேற்று (20.06) இரவு இடம்பெற்றுள்ளது.

ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிலநடுக்கம் செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply